கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கவனச்சிதறல் இல்லாமல் படித்தாலே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விதமாக தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி கொடியாசிய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் சிவில் சர்விஸ் என்கிற போட்டி தேர்வு குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சிவில் சர்விஸில் (போட்டி தேர்வு) மொத்தம் 23 வகைகள் உள்ளன. போட்டி தேர்வில் வெற்றி பெறும்போது குறைந்த வயதில் தலைமை பொறுப்பு கிடைக்கும். மேலும், பணியில் மனதிருப்தி கிடைக்கும்.



மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் கூட பதவிகள் கிடைக்கும். 

நான் மருத்துவம் பயின்றேன் அதன் பின் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவை மாநகராட்சி ஆணையராக பணிபுரிகிறேன். ஒரு மருத்துவராக மனநிறைவு அடைந்ததை விட இதில் மனநிறைவு அதிகம் பெற்றேன். 

பதவிக்கு வந்தபிறகு நிறைய சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், மக்களுக்கு சேவையாற்றுவதால் மனநிறைவு கிடைக்கிறது.



கவனச்சிதறல் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே போதும். இணையதளத்தைப் பயன்படுத்தி படிக்கலாம். 21 வயது என்பது தேர்வு எழுதுவதற்கான தகுதி. ஆனால், அதற்கான திட்டமிடுதல் தற்போதே அவசியம். சமூகத்தை நோக்கிய சிந்தனைகள் வரவேண்டும் அதற்கு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்." என்றார்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து மாணவர் எல்.லோகேஷ் கூறுகையில், "பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம்? என முடிவு செய்துவிட்டேன். ஆனால், எங்கு படிக்கலாம்? என்பதை அறியவே இங்கு வந்தேன். இங்கு வந்தது எனக்கு பயனுள்ளதாக உள்ளது." என்றார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...