சொட்டுநீர் பாசனம் மூலம் தயாராகிறது தர்பூசணி

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்து கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் கிணற்றில் கிடைக்கும் சொற்ப நீரைக் கொண்டு சிக்கனமாக விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டங்களில் பாலித்தீன் பேப்பர் மூலம் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெறுகின்றனர். 

தர்பூசணி பயிரிடுவதால் ஏக்கர் ஒன்றுக்கு 30 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. 60 நாள்களில் அறுவடையாகும் புதிய ரக தர்பூசணிக்கு உரம், மருந்துகள் சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் உரம் வீணாவதில்லை. மேலும் தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயோ உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் நுகர்வோர் தர்பூசணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். 

அதிக நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணியை அனைத்து பருவங்களிலும் மக்கள் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகி வருகிறது. வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதால் விவசாயிகள் தர்பூசணியை ஆர்வத்துடன் சாகுபடி செய்துவருகின்றனர். 

இதுகுறித்து திருமூர்த்தி என்ற விவசாயி கூறுகையில், கிலோ ரூ.5 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், லாபம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ.9 முதல் ரூ.11 வரை விற்பனையானதால் ஓரளவு நல்ல இலாபம் கிடைத்தது. சத்தி சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலை குறைவாக விற்பனையாகிறது. அறுவடை செய்யப்படும் தர்பூசணியை வாங்கும் வியாபாரிகள் அவற்றை கேரளா, கர்நாடக மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்." என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...