'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிப்பு

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிக்கப்பட்டன.

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கி கவுரவிக்கப்பட்டன.



கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை இந்தியா கூட்டமைப்பின் மற்றும் அட்வர்டைசிங் கிளப் சார்பில் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து 4-வது 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முருகப்பா தொழில்நிறுவன குழுமத்தின் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை இந்தியா கூட்டமைப்பின் தலைவர் வனிதா மோகன், அட்வர்டைசிங் கிளப் ஆப் கோவையின் தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், ஸ்ரீ கோவையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அனன்யா நானா - நானி, ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் இதில் பங்கு பெற்றனர். இதைத்தொடர்ந்து, 'பிராண்ட் கோவை தூதர்கள் விருதுகள்' வழங்கப்பட்டன. 'எமர்ஜிங் பிரேண்ட் விருது' (Emerging brand) அனன்யா நானா - நானி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அதன் இயக்குநர் உமா யுவராஜ் பெற்றுக் கொண்டார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம், சுமார் 1,500 முதியவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.



மரபுரிமைக்கான விருதை (Legacy brand) ரூட்ஸ் நிறுவனமும், பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கிய நரேன் கார்த்திகேயனுக்கு தனிமனிதனுக்கான விருதும் (Brand Persona), ஐக்கானிக் விருது (Iconic Award) ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...