மறு பூஜையுடன் நிறைவடைகிறது பண்ணாரி அம்மன் குண்டம் விழா

ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது.

ஈரோடு : சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. 

சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,  அம்மன் சப்பரம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றபின் மார்ச் 27-ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 3-ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை தங்கத்தேர் வழிபாடு மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். 



குண்டம் விழாவின் நிறைவாக இன்று  மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கென இன்று  அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...