'வீடுகளில் கருப்பு கொடியை கட்டுவோம்' : பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைக்கும் எதிர்க்கட்சிகள்

சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னை : தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கோடி ஏற்ற அனைத்து கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை-யில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. வரும் 11-ம் தேதி தொடங்கும் இந்தக் கண்காட்சி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரதமருக்கு கருப்பு கோடி காட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.  பிரதமர் தமிழகம் வரும் பொழுது, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அவ்வாறு இல்லையேல், கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பேனர்கள் சேதம் 

இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்தனர். மேலும், அந்த பேனர்களில் "காவிரி எங்கே?" என்று கருப்பு மையால் எழுதிச் சென்றனர்.  சேதப்படுத்தப்பட்ட பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை தற்போது புதிய பேனர்களை வைத்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...