கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசைக் கண்டித்து நேற்று நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். அங்கு குவிக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசார் எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்களை தெப்பக்காடு பகுதியில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு கர்நாடக எல்லையான கக்கநல்லா பகுதிக்குச் செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாற்று வழியில் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டபடி கக்கநல்லா பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இந்த போராட்டம் காரணமாக இரு மாநிலங்கள் இடையே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...