ஜெயலலிதா மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வாய்ப்பில்லை : ஜெ. தீபா சந்தேகம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தற்போதைய தமிழக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஊடகங்கள் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து வருகின்றன. காவிரி மேலாண்மை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தங்களது பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அறவழி போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். தற்போதைய அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் போட்டியிடுவோம். 

முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்தது போல, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆணையத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு முரண்பட்ட தகவல்களையே கூறி வருகின்றனர். தமிழக அரசின் தலையீடு இல்லாமல் விசாரணை ஆணையம் செயல்படவேண்டும் அல்லது சி.பி.ஐ., மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை வெளிவரும்,” என்றார்.

ஊடகங்களை தாக்கி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “ஆரம்ப கட்டத்தில் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியதே ஊடகங்கள் தான். ஆனால், சில ஊடகங்கள் தற்போது என்னைப் புறக்கணித்து வருகின்றன என்பதோடு என்னை பற்றிய எதிர்மறை செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன,” எனக் கூறினார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...