மாவட்ட ஆட்சியரிடம் லாரிப்பேட்டை பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு

கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.


கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரி புக்கிங் ஏஜெண்ட் அலுவலகம், பஞ்சர் கடை ஒர்க்‌ஷாப் என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். 1976-ம் ஆண்டு தங்களுக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கிய போது 120 கடைகள் இருந்தன. தற்போது, 220 கடைகளுக்கு மேல் அதிகரித்து 1,500-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

லாரிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பழைய மார்கெட்டுக்கு கொடுத்ததின் காரணமாக இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.



உக்கடம் பகுதியில் இயங்கி வரும் பழக் கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கு லாரிப் பேட்டையில் இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் பழங்கள் கோவைக்கு வருகின்றன. மேலும், செட்டிபாளையம் பகுதியில் 25 ஏக்கரில் இடம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அதில், அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...