கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்ற வலியுறுத்தி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதி டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- சிங்காநல்லூர் நகரப் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. மதுபானக் கடையின் பின்னால் இயங்கி வரும் டாஸ்மாக் பாரின் பின்புறம் மது அருந்த வருபவர்கள் கடையின் பின்வாசல் வழியாக மது அருந்துகின்றனர். மேலும், அங்கேயே சிறுநீர் கழிப்பது, மதுபாட்டில்களை சாலையிலேயே வீசிச் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களும் குடிமகன்கள் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்களுக்கும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.



மேலும். அவ்வழியாக செல்லும் பெண்களைப் போதை ஆசாமிகள் கேலி செய்கின்றனர். இது குறித்து கேட்டால் அவமரியாதையாக பேசுகின்றனர். இதுபோன்ற அநாகரிகமற்ற செயல்களால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் பாரை அகற்ற வேண்டும் அல்லது பின்புறமாக உள்ள கதவை சுவர் வைத்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...