கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி, கூலிங்கிளாஸ்

கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை மாநகர போலீசாரின் சார்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு, சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை மாநகர போலீசாரின் சார்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு, சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இது இன்னமும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ஆண்டுதோறும் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, சாதாரணமாக உள்ள தொப்பிக்கு பதிலாக, சோலார் தொப்பி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வெயிலின் நீண்ட நேரம் நிற்கும் காவலர்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருக்காது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா, ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்கினார். கோவை மாநகரில் மொத்தம் 56 சிக்னல் பாய்ண்டுகள் உள்ளன. இதில், ஒரு சிக்னலில் இரண்டு காவலர்கள் வீதம் சாலை போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதில், இன்று போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்களுக்கு மொத்தம் 60 தொப்பி மற்றும் 60 கூலிங்கிளாஸ் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர், வரும் வெள்ளிக்கிழமை மீதமுள்ள காவலர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.



அதேபோல, வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் 10.30 மணி முதல் 5;30 மணி வரை நான்கு வேளையும் நீர்மோர் அல்லது எலுமிச்சை சாறும் வழங்கப்பட உள்ளது. இதனால், போக்குவரத்து காவலர்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த நீர் மோர் வழங்கும் விழாவை மாநகர காவல் துணை ஆணையாளர் சுஜித் குமார் (போக்குவரத்து) துவங்கி வைத்தார். இதில், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் மகுடபதி, கொடி செல்வம் மற்றும் ஆய்வாளர் சதாசிவம், சண்முகம் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...