பல்கலைக்கழக விரிவாக்கம் : நில ஆக்கிரமிப்பிற்கு இழப்பீடு தராமல் காலம் தாழ்த்துவதாக புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 1980ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 5 ஊர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் 1,300 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு அப்போதைய சந்தை விலை 8,000 என நிர்ணயிக்கப்பட்டது. குறைவாக இருப்பதின் காரணமாக நிலம் கொடுத்தவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து நீதிமன்றம் 1.9.12-ல் நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதில் பலருக்கு முதல் தவணை பணம் வழங்கப்படவில்லை. 

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால், தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...