பிரதமர் வருகைக்கு எதிரான கருப்பு கொடி போராட்டத்தில் மாதர் சங்கம் பங்கேற்கும் - துணைத் தலைவர்

கோவை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெறவுள்ள கருப்புக்கொடி போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான வாசுகி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெறவுள்ள கருப்புக்கொடி போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான வாசுகி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மேட்டுப்பாளையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

காவிரி நீரில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற அரை நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவினை உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே செயல்படுத்த மறுக்கின்றது மத்திய அரசு. தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தைப் புறக்கணித்துவிட்டு கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தமிழகத்தை வஞ்சித்த பிரதமர் மோடி இதே தமிழகத்திற்கு வருகை தரும் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் பங்கேற்கும். காவிரி விவகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் பாசன பகுதிகளை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக மாற்றி ஹைட்ரோ கார்பன் லைசன்ஸ் என்ற ஒரே லைசன்ஸ் கொடுத்து எதை வேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது. 

காவேரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கி இப்பிரதேசத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது தான் மத்திய அரசின் நோக்கம். 

இது ஒரு மிகப்பெரிய சதி வலைப்பின்னல் என கருதுகின்றோம். எனவே இவை இரண்டுக்கும் சேர்த்து தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதி நிலையில் இருக்கும் போது இங்கே நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சிறிது காலம் தள்ளிப் போடலாம் என்பதே எங்களது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...