காவிரி விவகாரம்: கோவை, திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க-வினர் கைது

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.



இதேபோல், திருப்பூரில் பா.ம.க.வினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ரயில் நிலையத்திற்குள் அவர்களை போலீசார் அனுமதிக்காததால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



மேட்டுப்பாளையத்தில் பா.ம.க-வை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரியில் ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு திரண்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...