தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 



 

கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு, ஹாசன், சிமோகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு 20 கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல, தமிழகத்தில் இருந்து 11 பேருந்துகள் கர்நாடகத்துக்கு இயக்கப்படுகின்றன. 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுவதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் அனைத்து பேருந்துகளையும் கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. 



இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி புதுப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் கர்நாடக அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் சையத் ஜாகீர் அகமது புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் எதிரொலியாக மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வந்த கர்நாடக பேருந்துகள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டன. அதில் இருந்த தமிழக பயணிகளை சோதனை சாவடியில் இறக்கிவிடப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்ல அங்கு காத்திருந்த பயணிகளை கர்நாடக பேருந்துகள் ஏற்றிச் சென்றன. 



மேலும், கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சில வாகன ஓட்டிகள் கர்நாடக பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட்டை கழற்றி டி.என் என மாற்றிக் கொண்டு தமிழகம் வந்தனர். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி ஆசனூர் காவல் நிலைய சோதனைச் சாவடி, திம்பம் மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி மீண்டும் கர்நாடகத்துக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். சத்தியமங்கலம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கர்நாடக செல்லும் 11 அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...