ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் : கோவையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே முழுமையான தீர்வு எனவும், இதை வலியுறுத்தி அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார். நாளை பிரதமர் வருகையை கண்டித்து அரசியல் கட்சிகள் நடத்தும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் தங்கள் கட்சி கலந்து கொள்ளாது எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சியினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர் எனவும், அது சரியானது தான் எந்ரும் கூறினார். 

சென்னையில் போராடியவர்களிடம் காவல் துறை இவ்வளவு கடினமாக நடந்து கொண்டு இருக்கத் தேவையில்லை என தெரிவித்த அவர் காவல் துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அ.ம.மு.க இணைந்து போராடும் எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா சிலையை கூட சரியாக வைக்கத் தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் இருக்கின்றனர் எனவும், யார் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். 

மேலும், அம்மா ஆட்சியை அ.ம.மு.க அமைக்கும் என்பதை ஊடகங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...