மேம்பாலம் கட்டும் பணிக்காக கட்டிடம் இடிப்பு: மாற்று இடத்திற்கான பணிகளும் தீவிரம்

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும், அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டம் துரிதமாக முடிக்கப்படும் என்றார். 

இந்த நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் இன்று காலை மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் 28 பழக்கடைகளும், 4 கோழி இறைச்சி கடைகளும் செயல்பட்டு வந்தன. மேம்பாலப் பணிகளுக்காக வணிக வளாகம் இடிக்கப்படவிருப்பதால் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

மாற்று இடம் கோரிய பழக் கடை வியாபாரிகளுக்கு தற்காலிகமாக லாரிப்பேட்டை வணிக வளாகத்தில் இடம் வழங்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. 4 கோழி இறைச்சி கடைகளுக்கும் பேரூர்-சுந்தராபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் விற்பனை வளாகத்தில் ஷெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

முன்னதாக, மீன் மார்க்கெட்டுக்குள் கோழிக்கடை அமைப்பதற்கு மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கோழிக் கடைகள் வருவதால் சில்லறை மீன் வியாபாரிகளுக்கும், வாகன நிறுத்துவதற்கும் இடையூறாக இருக்கும் என்று மீன் வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளோடு நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன் வியாபாரிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வளாகத்தின் ஜெனரேட்டர் அறைக்கு அருகே கோழிக் கடை அமைக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து மீன் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...