காருண்யா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : பேராசிரியரின் கார் அடித்து நொறுக்கியதால் பதற்றம்

கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



சிறுவாணி செல்லும் சாலையில் காருண்யா கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், அக்கல்லூரியில் மிக அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் அக்கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்தப் போராட்டத்தில் 150 மாணவிகள் உட்பட பெண்கள் 700 பேர் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, "சஸ்பெண்ட் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், யூனியன் வேண்டும், கட்டணத்தை உயர்த்தாதே" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் எலிஜா பிளாசம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 



இதனிடையே, பேராசிரியர் ஒருவர் கல்லூரியின் வாயிற் கதவு திறந்த போது, காரை வேகமாக இயக்கினார். அப்போது, போராட்டம் நடத்தி வந்தவர்கள்  மீது கார் மோதியதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரின் காரை மடக்கி அடித்து நொறுக்கினர். இதனால், கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. 



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...