ஒரே நேரத்தில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த திருப்பூர் மாணவி

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி யோகாவில் பல்வேறு முறைகளை திறம்பட செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி கோவை கனியூர் பகுதியிலுள்ள பார்க் குளோபல் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார். தனது ஒன்பது வயது முதல் யோகாவில் ஆர்வம் செலுத்தி வரும் இந்த மாணவி பல்வேறு தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியை தான் பயின்று வரும் பள்ளியில் இன்று அவர் மேற்கொண்டார். 



முன்னதாக, செலபாஸ் என்று அழைக்கப்படும் மார்பு பகுதியை மட்டும் தரையில் படும் படி உடலை வளைத்து உருண்ட படி சுமார் 13.8 வினாடிகளில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 15 வினாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இதேபோல், முக தாடையை தரையில் ஊன்றி ஏற்கனவே 2 நிமிடங்கள் யோகாசனம் செய்யப்பட்ட சாதனையை, சுமார் 7 நிமிட நேரம் நிலைத்து புதிய சாதனையை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.



இது மட்டுமின்றி முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குடுவைகளில் முட்டைகளை 18.28 வினாடி நேரத்தில் வைத்து கின்னஸ் சாதனை படைத்தார். ஒரே நேரத்தில் யோகாவில் மூன்று கின்னஸ் சாதனை படைத்த அம்மாணவி மேலும் இரண்டு வகை யோகா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...