எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வினியோகம்

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

எம்.பில்., பிஎச்.டி., மற்றும் பி.எட், போன்ற மேற்படிப்புகளுக்கு உண்டான தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. www.b-u.ac.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 7-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...