65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படம் 'டூ லெட்' தேர்வு

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படமாக டூ லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படமாக டூ லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு தேர்வு செய்த விருதுகளின் பட்டியலை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார். இதில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை பார்வதி மேனன், மலையாளத்தில் சிலபஸ் என்ற படத்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பூ மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார்.

சிறந்த படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும், சிறந்த இந்திப்படமாக நியூட்டனும், சிறந்த தமிழ் படமாக டூ லெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2, சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா, சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை, மாம் (பின்னணி இசை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...