சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உற்சவ திருவிழா 15-ம் தேதி தொடக்கம்

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது. 

தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.

21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும். 

மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...