கோவையில் ‘அக்குவாபோனிக்ஸ்‘ முறை விவசாயம் குறித்த கண்காட்சி

கோவை: அக்குவாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வது குறித்த கண்காட்சி இன்று கோவையில் தொடங்கியது.


அக்குவாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வது குறித்த கண்காட்சி இன்று கோவையில் தொடங்கியது. 



வறட்சி காலங்களில் ‘அக்குவாபோனிக்ஸ்‘ முறையில் விவசாயம் செய்யும் முயற்சியை கோவையைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் வழக்கறிஞருமான ஏ.கே. சரவணன் மேற்கொண்டு வந்தார். இதற்கான கண்காட்சியை ஜி.ஆர்.ஜி கல்வி குழுமத்தின் தலைவர் நந்தினி ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில், ‘அக்குவாபோனிக்ஸ்‘ முறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை உற்பத்தி செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஏ.கே. சரவணன் கூறுகையில், "அக்குவாபோனிக்ஸ் முறை விவசாயம் என்பது காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களை அக்குவாகல்ச்சர் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதாகும். இது எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் மீன் கழிவுகள் கொண்ட தண்ணீரை எடுக்க வேண்டும் அதில் இயற்கையாகவே அமோனியம் உற்பத்தியாகியிருக்கும். அந்த தண்ணீரை செடிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதன் பின் எங்களிடம் உள்ள 'பாக்டீரியா'வை அமோனியம் இருக்கும் நீருடன் சேர்க்க வேண்டும். 15 முதல் 45 நாட்களுக்குள் செடிகளுக்கு தேவையான புரதச்சத்து உற்பத்தியாகிவிடும். இது செடிகள் வளருவதற்கு அத்தியாவசிய சத்தாகும். 

இந்த செடிகளை மண்களில் வளர்க்க அவசியமில்லை. சரளை, கூழாங்கற்கள் போன்ற மண்ணில்லா விவசாயம் முறையில் இந்த செடிகளை வளர்க்கலாம். இதன்மூலம், இடபற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை குறையும்," என்றார். 

இந்த அக்குவாபோனிக்ஸ் விவசாயம் முறை குறித்து அறிந்து கொள்ள விரும்புவர்கள், மாதந்தோறும் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பயிற்சி பட்டறையில், ரூ. 2,500 கொடுத்து சேர்ந்து கொள்ளலாம். இந்தக் கண்காட்சி அரங்கு டாக்டர். அழகப்பா சாலை, டாடா பாத் பகுதியில் க்ளோ ஸ்டீம் லேப் (Glow STEAM Lab) என்ற பெயரில் இயங்கி வருகிறது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...