புனேவிலும் சென்னை அணிக்கான போட்டிகளை நடத்துவதில் சிக்கல்..?

சென்னையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.பி.எல்., போட்டியை தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புனேவில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : சென்னையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.பி.எல்., போட்டியை தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புனேவில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, காலணி வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் அரங்கேறியது. இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஐ.பி.எல்., போட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதனால், சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ஐ.பி.எல்., போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப்., 14-ம் தேதியிலிருந்து 20-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஐ.பி.எல்., நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது புனேவிலும் சென்னை ஐ.பி.எல்., போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீர் எப்படி வழங்க முடியும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...