வகுப்பறையில் காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட்

கோவை : ஜம்மூ - காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆசிரியரின் அனுமதியுடன் வகுப்பறையில் பேசிய சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை :  ஜம்மூ - காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆசிரியரின் அனுமதியுடன் வகுப்பறையில் பேசிய சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இவர், புரட்சிகர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும்படி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் பேச முன்வராத நிலையில், மாணவி பிரியாவை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் கூறினார். இதில், மாணவி பிரியா காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த உதவி பேராசிரியர் மாணவியை திட்டியுள்ளார். மேலும், ஆசிரியரையும் கண்டித்துள்ளார். 



இந்நிலையில், மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியரும் முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவி பிரியாவை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மதரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதாலும், அதை கேட்கச் சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் மாணவியை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி பிரியா கூறுகையில், "பொதுவான சம்பவம் குறித்து ஆசிரியரின் அனுமதியுடனே வகுப்பறையில் பேசினேன். இது குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல், தன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக, மற்ற மாணவர்களிடமும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. எத்தனை நாள்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கவில்லை. நான் மாணவர் அமைப்பில் இருப்பதால், அனைத்து விஷயங்களுக்கும் முதலில் குரல் கொடுப்பேன். வாட்ஸ் அப்பில் நான் பகிரும் தகவல்கள் குறித்தெல்லாம் விமர்சிக்கிறார்கள். அது என் தனிப்பட்ட விஷயம். இதையெல்லாம் மனதில் வைத்துதான் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மே 14-ம் தேதி, எனக்கு தேர்வு தொடங்க உள்ளது. தற்போது, ஹால் டிக்கெட் கொடுப்பார்களா என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக, கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்ப இருக்கிறேன். விசாரணைக்கு அழைத்தால் சென்று தனது தரப்பு நியாயத்தை சொல்வேன்." என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...