ஆசிஃபா பாலியல் வன்கொடுமை சம்பவம் : பா.ஜ.க.வை கண்டு மிரளும் பெண் குழந்தைகளின் பெற்றோர்

கத்துவா, உன்னாவ் பாலியல் பலாத்காரம் சம்பவங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பா.ஜ.க., வினரைக் கண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அலறுவதைப் போன்ற வாசகங்கள் கேரளாவில் உள்ள வீடுகளில் எழுதி போடப்பட்டுள்ளது.

கத்துவா, உன்னாவ் பாலியல் பலாத்காரம் சம்பவங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பா.ஜ.க., வினரைக் கண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அலறுவதைப் போன்ற வாசகங்கள் கேரளாவில் உள்ள வீடுகளில் எழுதி போடப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனார். காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலான நிலையில், ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்கப் பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

இதில், 18 வயது நிரம்பாத சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். மேலும், பாலியல் கொடூரக் குற்றம் வெளியே தெரியாமல் இருக்க ரத்தக்கறை படிந்த ஆடைகளையும், ஆதாரங்களையும் அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் டெல்லி தடயவியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத சிறுவன், 8 வயது சிறுமியை அடித்துக்கொலை செய்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றம் தொடர்பாக 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பா.ஜ.க., எம்.எல்.ஏ., மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார்‌ அளித்திருந்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8-ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மாணவியின் தந்தை உயிரிழந்தார். 

இதையடுத்து, மாணவி தரப்பில் தரப்பட்ட புகாரில் எம்.எல்.ஏ.வின் சகோதரரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணைப் பிறப்பித்தது. இந்நிலையில், பா.ஜ.க., எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர். மத்தியில் பா.ஜ.க., ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த இரண்டு விவகாரங்களும் இந்திய அளவில் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. 

இந்நிலையில், கேரளாவில் சில வீடுகளில் பா.ஜ.க.,வினர் உள்ளே வரவேண்டாம் என பலகையில் எழுதி மாட்டியுள்ளனர். அந்தப் பலகைகளில், ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி உள்ளார். எனவே, பா.ஜ.க.,வினர் வாக்கு சேகரிப்பதாக வரவேண்டாம். ஏதேனும் நோட்டீஸ் தரவேண்டுமென்றால், வாயிற்கதவு வெளியே போட்டுவிட்டுச் செல்லவும்’ என எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற வாசகங்கள் பல வீடுகளில் எழுதி மாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ‘பலாத்காரி ஜனதா பார்ட்டி’ என ஹேஷ்டேக் போட்டு பரப்பப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...