நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

மேலும், வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்தீவு, லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...