கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடக்கம்

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிர்ஸ்ட் சார்பில் 8 வயது முதல் 19 வயதிற்குட்பட்டோருக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி முகாம் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசாமி கூறுகையில், "இந்தக் கோடை கால பயிற்சியானது எஸ்.என். ஆர் கல்லூரி மைதானத்தில் கோவை மாவட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வினோத்குமார், நாசர் மற்றும் மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்டோருக்கான துணை பயிற்சியாளர் அவிநாஷ் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். 

இந்தக் கோடை கால பயிற்சி முகாமில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் சத்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிகெட் டிரஸ்ட் அலுவலகத்தை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை நேரிலோ அல்லது 0422-2531022/2531122 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 7200558793 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைப் பெற்று கொள்ளலாம்," எனக் கூறியுள்ளார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...