41-வது வருடமாக சேவையை ஆற்றும் 'கோவை எக்ஸ்பிரஸ்'

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

தெற்கு ரயில்வே சார்பில் முதல்முறையாக 1977-ம் ஆண்டு ஏப்.,14-ம் தேதி முதல் நாள்தோறும் இயங்கும் அதிவிரைவு ரயில் 'கோவை எக்ஸ்பிரஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 காலகட்டங்களில் பிரபலமான ரயிலாக திகழ்ந்த இந்த ரயில், சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை ரயில்நிலையம் வரையில் நிறுத்தங்களின்றி இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு போன்ற ரயில் நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த நிலையில், பல்வேறு சிறப்புகளைப் பெற்ற 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ரயில் எண்கள் மற்றும் நேரங்களில் இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது 75/76 என்ற எண்களில் இருந்து 12675/12676 எண்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலே கூறியுள்ள ரயில் நிறுத்தங்களைத் தவிர்த்து, பெரம்பூர், மொரப்பூர், சேலம் மற்றும் திருப்பூர் போன்ற மேலும் பல நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன.  



 

இது தொடர்பாக ரயில் பயணி சித்தார்த் அசோக் கூறுகையில், "கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ரயில் என்ஜின் ஓட்டுநர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது," என்றார். 

நாள்தோறும் அடிப்படையில் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து அதிகாலை 06.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 01.45 மணிக்க வந்தடையும். அன்று மதியமே 02.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.35-க்கு சென்றடையும். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...