கோடை சுற்றுலா : பைக்காரா படகு இல்லத்தின் சிறப்புகள்

நீலகிரி : கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்.


நீலகிரி : கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். 

சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்தப் பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன? என்பதை விளக்குவதற்காகத் தான் இந்த வாராந்திர கட்டுரை. 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்களில் பைக்காரா படகு இல்லமும் ஒன்று. உதகை படகு இல்லத்திற்கு அடுத்தபடியாக பைக்கார படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் உள்ளது. கூடலூர் செல்லும் சாலையின் இடதுபுறம் அருகே, வனப்பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்றால் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்றுவிடலாம். பைக்காரா படகு இல்லத்திற்கு செல்ல வேண்டுமானால் கூடலூரை நோக்கி பயணம் மேற்கொள்ளும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணிக்கலாம்.

வாகன பார்க்கிங் கட்டண விவரங்கள் :  

இரு சக்கர வாகனங்கள் ரூ. 5

நான்கு சக்கர வாகனங்கள் ரூ. 15

வேன் மற்றும் பெரிய ரக வாகனங்களுக்கு ரூ. 30 வசூலிக்கப்படுகிறது.



பைக்காரா படகு இல்லத்தில் 5 ஸ்பீடு படகுகள் உட்பட 23 படகுகள் உள்ளன. படகு சவாரி பயணக் கட்டணம் தொடர்பான விவரங்கள்.

    

8 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 770-ம்

10 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 890-ம்

15 பேர் கொண்ட இருக்கையில் பயணிக்க 20 நிமிடங்களுக்கு ரூ. 1,240 வசூலிக்கப்படுகிறது.



பைக்காரா படகு இல்லத்தின் சிறப்பம்சமே, ஸ்பீட் படகுதான். இதில், மூன்று பேர் கொண்ட இருக்கையில் 10 நிமிடங்களுக்கு ரூ. 800 வசூலிக்கப்படுகிறது. மேலும், படகு சவாரி செய்யும் போது சுயபுகை படமெடுக்க தடை என்பதைப் படகு இல்லத்தின் நுழைவாயிலிலும், படகு இல்லத்தின் பல்வேறு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...