பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய 'மொபைல் - ஆப்' அறிமுகம்

கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு தேர்வு எழுதும் பொழுதும் அவர்களுக்காக உறுதுணையாக இருப்பது அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்கள். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நேரடியாக , தேர்வு எழுதும் தன்னார்வலர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதனால், அவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்காக ஆட்கள் கிடைக்காததால் தேர்வு எழுதுவது தடைபடுகிறது. எனவே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளையும் , அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் வகையில் சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த மொபைல் ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியை பார்வையற்றவர்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தாமாகவே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவரங்களை இதில் நேரடியாகப் பதிவிடலாம். பிறகு தேர்வு எழுத தயாராக இருக்கும் தன்னார்வலர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தி யாரெல்லாம் தேர்வு எழுதுவதற்காக அழைக்கிறார்கள் என்பதையும் நேரடியாக தெரிந்து கொல்லலாம்.

தற்போது இந்த மொபைல் ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மொபைல் - ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...