ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியை மீட்டெடுத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சுயநினைவை இழந்த முதியவர் ஒருவர், கை மற்றும் முகத்தில் காயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை அந்த முதியவரை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ஆவணங்களைச் சோதித்து பார்த்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மன் (87) என்பதும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் தெரியவந்தது. அந்த முன்னாள் அதிகாரியை அவரது குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ளது ஈர நெஞ்சம் அறக்கட்டளை.

இது குறித்து ஈர நெஞ்சம் மகேந்திரன் கூறுகையில், " மேட்டுப்பாளையத்தில் உள்ள முதியோருக்கான தாங்கும் விடுதி ஒன்றில் லக்ஷ்மன் இருந்துள்ளார். டெல்லி செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்த போது அவர் வழி தவறி சென்றிருக்கிறார். அவரை ரயில் நிலைய காவலர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தோம். தொடர்ந்து, அவரது கைப்பையில் இருந்த துண்டு சீட்டுகளைப் பார்த்த போது அவரது மகள் கலா டெல்லியில் இருப்பது தெரியவந்தது. அவருக்குத் தகவல் கொடுத்தோம். கோவை வந்த அவர், தனது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவரை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றியையும் தெரிவித்தார். பின்னர், அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, தற்போது வரை ஆதரவின்றி இருந்த முதியோர்கள் சுமார் 35 பேரை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடையே ஒப்படைத்துள்ளோம்." என்றார்.

முதியவரை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் மகேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...