காந்திபார்க் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் திறப்பு

கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.


கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.



மாநகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு காந்தி பூங்கா பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நீச்சல் குளத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 1.87 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

தற்போது அந்த நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 12 அடியாக ஆழமாக இருந்த நீச்சல் குளம் 4.5 அடியாக மாற்றப்பட்டது. மேலும், 12.6 மீட்டர் அகலத்திற்கும், 25.6 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கென இரண்டடி ஆழத்தில் குட்டி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய நீச்சல் குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம் சிறிய நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



கோடை விடுமுறை விடப்பட்டுள்ள இந்த நேரத்தில், நீச்சல் குளம் திறக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...