நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும்: காவல் துறை எச்சரிக்கை

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நொய்யலில் மணல் அள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.



நொய்யல் பாதுகாப்பு குழுவினர் ஒருங்கிணைத்த இந்த கூட்டம் மாதவராயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கூடத்தில் மதவராயபுரம், ஆலந்துறை, தொம்பிளிபளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், "நொய்யலில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை பாயும். கழுதை, மாட்டுவண்டி போன்றவை மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி நொய்யல் ஆற்றுப்படுகையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், அந்த பகுதி இளைஞர்களும் போலீசாருக்கு உதவி செய்ய உள்ளனர்." என்றார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...