"பெண்கள் இருக்காங்க, உள்ளே வராதீங்க": பா.ஜ.க-வினரை விரட்டும் கேரள குடியிருப்புகள்

கோவை: 'நாய்கள் ஜாக்கிரதை', 'இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்', 'வாகனங்களை கேட்டின் முன்பு நிறுத்தாதீர்கள்' போன்ற வாசகங்கள் வீட்டின் வாயில்களில் எழுதி வைக்கப் பார்த்திருப்போம். ஆனால், கேரளா மக்கள், 'பெண்கள் இருக்காங்க, பா.ஜ.க-வினர் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்' என்று எழுதி வைத்து ஒரு புரட்சியை தொடங்கியுள்ளனர்.

கோவை: 'நாய்கள் ஜாக்கிரதை', 'இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்', 'வாகனங்களை கேட்டின் முன்பு நிறுத்தாதீர்கள்' போன்ற வாசகங்கள் வீட்டின் வாயில்களில் எழுதி வைக்கப் பார்த்திருப்போம். ஆனால், கேரளா மக்கள், 'பெண்கள் இருக்காங்க, பா.ஜ.க-வினர் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்' என்று எழுதி வைத்து ஒரு புரட்சியை தொடங்கியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை கோயிலுக்குள் அடைத்துவைத்து, காவல் துறை அதிகாரி உள்பட 8 பேர் மயக்க மருந்து கொடுத்து அந்த சிறுமியை 3 நாட்கள் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்பது அடுத்தடுத்த விசாரணையில் அம்பலமாக அம்மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக பொதுமக்கள் திரும்பினர். 



இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தினர். அந்த சம்பவம் சிறுமியை இழந்த வேதனையில் தவித்த காஷ்மீர் மக்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், அந்த சிறுமியின் மரணத்திற்காக நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரள மக்கள் நூதன முறையில் பா.ஜ.க-வினருக்கு 'பளார்' கொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் செங்கன்னூரில், 'வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள், வராதீர் : ஓட்டு கேட்டு வரும் பாஜக-வினர் கேட்டின் வெளியே நிற்கவும்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. செங்கன்னூர் தொகுதியில் உள்ள வீடுகள் முழுக்க இது போன்ற வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்களை காண முடிந்தது.

இன்னும் சில வீடுகளில், 'இங்கு நிறைமாத கர்ப்பிணி இருக்கிறார். அதனால், பா.ஜ.க-வினர் உள்ளே வரக்கூடாது.' என்று எழுதப்பட்டிருந்தது. "ஒரு சில இளைஞர்கள் தொடங்கிய இந்த போஸ்டர் முறை தற்போது அனைத்து தரப்பினராலும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை." என்கிறது செங்கன்னூர் தொகுதியில் அசைக்க முடியாத பலம் பெற்ற சி.பி.எம். கட்சி வட்டாரம்.

வெளியில் தலைகாட்ட கூச்சப்படும் அளவிற்கு கடுமையான விமர்சனங்களால் நொந்து போன பா.ஜ.க-வினர், "கடந்த சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஒருவர் 28 வயதான நிறைமாத கர்ப்பிணியை வயிற்றில் எட்டி உதைத்தார். அதனால், அந்த பெண்ணின் கரு கலைந்தது. ஆதலால், கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீடுகளில் அக்கட்சியினர் நுழையக் கூடாது என்று நாங்கள் எழுதி வைத்தோம். போஸ்டர் சண்டை இங்கு புதிதல்ல." என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.



செங்கன்னூரில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வாறு போஸ்டர் சண்டைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...