சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 40 வயது ராஜேஸ்வரி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள மையத்தில், இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த மாதம் 5ம்தேதி முதல் காலில் நரம்பு பாதித்ததால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அன்று முதல் யானை தொடர்ந்து படுத்துக் கொண்டே இருக்கிறது.

இதனையடுத்து யானை நிலைமை மோசமடைந்ததையடுத்து கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்தார். மேலும், யானைக்கு இதுவரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், யானையைப் பரிசோதித்து 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டே கருணை கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...