கோவை மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் இன்று முதல் மாற்றம்

கோவை: போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் தரைக்கீழ்ப்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 20-ம் தேதி வரை இயங்கும் ரயில்கள் தாமதமாக இயங்கும் என சேலம் தெற்க ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் தரைக்கீழ்ப்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 20-ம் தேதி வரை இயங்கும் ரயில்கள் தாமதமாக இயங்கும் என சேலம் தெற்க ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது, போடிநாயக்கன்பட்டியில் வசிக்கும் சுமார் 500 குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலும், போடிநாயக்கன்பட்டியைச் சேலம் நகரத்துடன் இணைக்கும் பொருட்டும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் ஒத்துழைப்புடன் பெரிய தரைக்கீழ்ப்பாலத்தை கட்டுவதற்கான பணிகளை இன்று முதல் துவக்க ஆணை பிறப்பித்துள்ளார். இந்தப் பெரிய அளவிலான மெகா பிளாக் என்றழைக்கப்படும் பணிகளால், பயணிகள் ரயில்களின் இயக்கம் இன்று (ஏப்.,16) முதல் வரும் 20-ம் தேதிவரை பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சரக்கு ரயில்களின் இயக்கம் 15, 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முழுமையாக நிறுத்தப்படும்.

4.5 மீ அகலம், 3.65 மீ உயரம் மற்றும் 1.53 மீ நீளம் கொண்ட 26 கான்கிரீட் கூடுகள் செய்யப்பட்டு, ரயில்தடத்தின் கீழ் நிறுவப்பட உள்ளன. இப்பணிகள் நடைபெறுவதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த போடிநாயக்கன்பட்டி வாசிகளின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியை சேலம் நகரத்துடன் இணைக்க உதவும். இந்த தரைக்கீழ்ப்பாலப்பணிகள் சுமார் ரூ. 2.83 கோடி திட்ட மதிப்பீட்டில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி. வெங்கடாசலம், தமிழக அரசு மற்றும் சேலம் மாநகராட்சியின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...