ஹால்மார்க் முத்திரைகள் கொண்ட நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை அட்சய திருதியை தினம் வருகிறது. அன்றைய நாளில் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை காரணமாக பெரும்பாலானோர் நகை வாங்குவது வழக்கம். இந்நிலையில், பொதுமக்கள் உரிய அங்கீகாரம் பெற்ற நகைக்கடைகளுக்கு சென்று தரச்சான்று பெற்ற நகைகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய தரச்சான்று நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக, இந்திய தரச்சான்று நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைமை அதிகாரி கலைவாணன் கூறுகையில், "பி.ஐ.எஸ் (BIS) நிறுவனத்திடம் தரச்சான்று பெற்ற நகைகடையை தரச்சான்றுடன் கூடிய பலகையை வைத்து உரிய அங்கீகாரம் பெற்ற நகைக் கடையா என நாம் கண்டறியலாம். ஒவ்வொரு நகைக்கும் 4 சான்றுகள் தரப்படும். நான்கு சான்றுகளும் இருக்கும் நகைகளைத் தான் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளாகும். இதில் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை தான் விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் பெரும்பாலான நகைக் கடைகளில் தரக்குறைவான தங்கம் விற்கப்படுப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரையை நகைக்கடைகள் தவறான முறையில் பயன்படுத்தினால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 1 வருடம் வரை சிறை தண்டனைக் கிடைக்கும். 4 முத்திரைகளும் வாங்கும் நகைகளில் இருக்கிறதா என வாடிக்கையாளர்கள் சோதித்து பார்த்து வாங்க வேண்டும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...