பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிடத் திட்டம்

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியது- பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ. 2,500 கோடிக்கு அச்சிடப்படும்" எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ. 500 நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை ரூ. 70,000 - ரூ. 75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...