பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது : ஆளுநர்

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் ஒருவர் ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்திப்பது இது முதல்முறையாகும். 

ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் கூறுகையில், "கல்வித்துறையில் எந்தத் தவறும் நடைபெற வில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ, அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்தப் புகாரும் இல்லை." என்றார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...