இணையதளம், செயற்கைக்கோள்கள் மகாபாரத காலத்திலேயே இருந்தது: திரிபுரா முதலமைச்சர்

திரிபுரா: இணையதளம் மற்றும் செயற்கைக்கோள்களின் பயன்பாடு மகாபாரத காலத்திலேயே இருந்ததுள்ளதாக திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.

திரிபுரா: இணையதளம் மற்றும் செயற்கைக்கோள்களின் பயன்பாடு மகாபாரத காலத்திலேயே இருந்ததுள்ளதாக திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் பேசுகையில், "இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது.

ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைக்கோள்கள் இருந்துள்ளன. மிகவும் பணக்கார கலாச்சாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது.

இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் நமது நாட்டைச்சேர்ந்தவர்களே. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...