தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய 'டாடா-காபி' நிறுவனம்

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டாடா-காபி நிறுவனத்திற்கு சொந்தமான உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை தாலுகா அளவில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.



மேலும், விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1.5 ½ லட்சம் மதிப்புள்ள கால்பந்து, காலணி, மற்றும் விளையாட்டு சீருடைகள், கைப்பந்து, கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு 1000 லிட்டர் சோலார் வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், படுக்கும் மெத்தைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் வழங்கினார்.



இதுகுறித்து டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் “பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் மிகுந்த சிரமத்தில் பணியாற்றி உங்களைப் படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...