பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய  பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம் தொடர்பாக, விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர்  உத்தரவிட்டார். விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்தினார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விருதுநகரில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பேராசிரியை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 7 குழுக்கள் அமைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்.பி., ராஜேஷ்வரி மற்றும் டி.எஸ்.பி., முத்து சங்கரலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...