பெண்களே...! : கோடையில் லெகின்ஸ் அணிய வேண்டாம்

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

கோவை : ஆடை அலங்காரம் என்பது நம் உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ஒன்று. கலர் கலராய் ஆடைகள் வாங்குவதில் பெண்களே என்றும் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆடைகள் நம் கால நிலைக்கு ஏற்ப மாறுபடும். பெண்களுக்கென பல்வேறு விதமான ஆடைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்த ஆடைகள் எல்லாம் வெயில் காலத்திற்கு உகந்ததா?



இந்த கேள்விக்கு விடை காண்பதை நாம் மறந்து விடுகிறோம். இந்த கோடைக்காலத்தில் லெகின்ஸ் உடை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

லெகின்ஸ் உடலில் உள்ள ஈரப்பதங்களை உறிஞ்சி, வறண்டு போகும். அதனோடு, வேர்வை வெளியேறும் போது இதன் காரணமாக சிறு தடிப்புகள் உடலில் தோன்ற வாய்ப்புள்ளதாகத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 



இது குறித்து பிரியங்கா என்ற இல்லத்தரசி கூறுகையில், "நான் லெகின்ஸ் அணிவேன். எனது கால்களில் சிறு தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. வேறு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் அணுகிய போது, லெகின்ஸ் அணிய வேண்டாம் என்று அறிவுரை கூறினார்." என்றார்.

இது குறித்து தோல் நோய் சிகிச்சை நிபுணர், மருத்துவர் மன்வீன் கபூர் கூறுகையில், "லெகின்ஸ் அணிவது சுலபம். ஆனால், அது ஏற்படுத்தும் பிச்சினைகள் அதிகம். குறிப்பாக கோடை காலத்தில் லெகின்ஸ் அணிவதை தவிர்த்திடுங்கள். இது வேர்வை வெளியேறுவதைத் தடுக்க வல்லது. மிகவும் இறுக்கமான ஆடையாக இருக்கும் லெகின்ஸ் நம் உடலுக்குள் காற்று செல்லவதைத் தடுக்கிறது. கோடைக் காலத்தில் தளர்வான ஆடைகளே சிறந்தது." என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...