கோவையில் விடிய விடிய ரெய்டு: ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவையில் நடத்திய ரெய்டில் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாமஸ் வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது, ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பி. விஜய லலிதாம்பிகை கூறுகையில், "கோவையை பொறுத்தவரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.



கடந்த வாரம் கோவையில் நெய் தயாரிக்கும் நிறுவனங்களில் தர ஆய்வு நடத்தினோம். பின்னர், கோடைகாலத்தை முன்னிட்டு பழச்சாறு தயாரிக்கும் கடைகளில் தரமான பழச்சாறு தயாரிப்பதை உறுதி செய்யும் விதமாக ரெய்டு நடத்தினோம். காந்திபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் நேற்று முன்தினம் இந்த ஆய்வு நடைபெற்றது. 

இந்த சூழலில், நேற்று இரவு தாமஸ் வீதியில் உள்ள குடோனில் நடத்திய ஆய்வில் ரூ. 3.69 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாநகரின் பல்வேறு பெட்டிக் கடைகளில் விற்பனையாவதும், இதைத் தடுக்க பொதுமக்கள் அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...