மேட்டுப்பாளையம் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகர் தனபாலின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகர் தனபாலின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் காட்டூரில் உள்ள பெருமாள் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் தனபால். இவர், இந்து முன்னணியின் நகர துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டின் மீது சிலர் பெட்ரோல் அடைக்கப்பட்ட இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் சரிவர வெடிக்காத காரணத்தால், அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மட்டும் சிறிய அளவிலான சேதங்களுடன் தப்பியது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தனபாலின் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்த காரணத்தினால் இச்சம்பவம் குறித்த காட்சிகள் ஏதும் போலீசார் வசம் சிக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் 4-வது முறையாக இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...