கோவையில் சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம்

கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



பவுண்டரி தொழிலின் மூலப்பொருட்களான நிலக்கரி, தேனிரும்பு, இரும்புகள் ஆகியவற்றின் விலை உயர்வால் சிறுகுறு வார்ப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோவை சேரன் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வீதம் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மூலப்பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வார்ப்பட ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...