சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆந்திர அரசு, மத்திய அரசுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. தொடர்ந்து, அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு, தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திரக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, ஆந்திராவின் பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு, பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்திருந்தனர். ஆனால், சந்திரபாபு நாயுடு, முழு அடைப்பினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிப்படையும் எனக் கூறி போராட்டத்தைப் புறக்கணித்தார். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை விஜயவாடாவில் அவரது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இன்று, சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...