கொளுத்தும் வெயிலில் அரசு பள்ளி சேர்க்கைக்காக அலைக்கழிக்கப்படும் பிஞ்சு குழந்தைகள்

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது.

திருப்பூர் : குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி கடும் வெயிலிலும் திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்திய சம்பவம் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியது. 

பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைகள் தனியார் பள்ளிகளில் துவங்கிவிட்டன. அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள், கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி திருப்பூர் கஞ்சம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியில் பயிலும் சின்ன குழந்தைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

கொளுத்தும் வெயிலில் அரசுப் பள்ளி சேர்க்கைக்காக இளம் சிறார்களை இதுபோன்று அலைக்கழித்த சம்பவம் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வரும் சீரிய செயல்கள், இதுபோன்ற நிகழ்வுகளால் விமர்சனத்திற்குள்ளாகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...