அ.தி.மு.க பொதுச்செயலாளரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய ஓ.பி.எஸ்., தரப்பு தயக்கம் : கே.சி. பழனிச்சாமி

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தயக்கம் காட்டி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- அ.தி.மு.க.,வில் தற்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் செல்லாது என்ற தீர்ப்பு மே முதல் வாரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் வரவாய்ப்பு இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பொதுச் செயலாளர் பதவியினை தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்வதை ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என தினகரன் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து ஓ.பி.எஸ். தரப்பினர் பின்வாங்குகின்றனர். 

பொதுச் செயலாளர் பற்றிய எந்த முடிவையும் பொதுக்குழு எடுக்க முடியாது. அ.தி.மு.க., சட்ட விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். இன்னொரு கட்சி தலைவர் சொல்லுவதை கேட்டு நடப்பவர்கள் அ.தி.மு.க., கட்சிக்கு தலைமை தாங்க முடியாது. ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் பதவிகள் கிடைத்தால் போதும் என்று செயல்படுகின்றனர். 

அ.தி.மு.க.,வில் இருந்து ஏற்கனவே என்னை நீக்கியிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சொல்கிறார். நீக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் கட்சி பணிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். நிதானம் இழந்து பேசக்கூடியவர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.,வை மோடி முன்னேற்றக் கழகமாக மாற்ற ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய ஆட்சியில் ஸ்டாலின் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சரை போல செயல் படுகிறார். பா.ஜ.க.,வின் கிளை போன்று அ.தி.மு.க., செயல்படுகின்றது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ, தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டோ நடத்த வேண்டும். இதற்கான உத்தரவுகள் நீதிமன்றம் மூலம் வரலாம், எனக் கூறினார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...