கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட கோவில் யானை உயிரிழப்பு

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் : உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 



சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே சென்றது.

எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 



இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் யானையைத் தீவிரமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை திடீரென ராஜேஸ்வரி யானை தானாகவே உயிரிழந்தது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...